search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம நபர்கள்"

    • திருவெண்ணைநல்லூர் அருகே அருகம்பட்டு கிராமத்தில் இந்த தோப்பின் நடுவில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது.
    • நேற்று இரவு கோவிலை மூடிவிட்டு சென்றார்.இன்று காலை கோவிலை திறக்க பூசாரி வந்தார். அப்போது கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்ப ட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே அருகம்பட்டு கிராமம் உள்ளது. இங்கு ஊருக்கு வெளியில் புளியந்தோப்பு உள்ளது. இந்த தோப்பின் நடுவில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது.  இக்கோவிலுக்கு கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இக்கோவிலில் தினமும் ஆராதனைகள், அபிஷேகங்கள் நடந்து வந்தன.   பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவில் பூசாரி சதாசிவம், நேற்று இரவு கோவிலை மூடிவிட்டு சென்றார். இன்று காலை கோவிலை திறக்க பூசாரி வந்தார். அப்போது கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்ப ட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்களிடம் இத்தகவலை கூறினார்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஊர் முக்கியஸ்தர்கள் கோவிலில் உடைக்கப்பட்டிருந்த உண்டி யலை பார்வையிட்டனர். கும்பாபி ஷேகம் நடந்ததில் இருந்தே இக்ேகாவில் உண்டியல் திறக்கப்படவில்லை. இதில் சுமார் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை இருக்கலாம் என்றும் ஊருக்கு ஓதுக்குபுறமாக இருந்ததால் இதனை நோட்டம் விட்ட மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்து இருக்கலாம் என்று ஊர் முக்கியஸ்தர்கள் சந்தேகம் அடைந்தனர்.  இதனைத் தொடர்ந்து இது குறித்து ஊர் முக்கியஸ்தர் சுபாஷ் (வயது 65) திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழைய பை-பாஸ் சாலையில் அரிமா சங்கம் சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு முக்கோண பூங்கா கட்டப்பட்டது.
    • அதில் உயரமான மின்கம்பங்கள் அமைத்து 4 புறமும் வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல்லில் இருந்து பரமத்திவேலூருக்குள் நுழையும் இடத்தில் பழைய பை-பாஸ் சாலையில் அரிமா சங்கம் சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு முக்கோண பூங்கா கட்டப்பட்டது.

    அதில் உயரமான மின்கம்பங்கள் அமைத்து 4 புறமும் வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பூச்செடிகளை வைத்து பரமத்திவேலூர் பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்களால் இந்த முக்கோண பூங்கா உடைத்து சேதப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அதில் இருந்த ஒரு பகுதி இரும்பு கம்பிகளை திருடிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், பூங்காவின் சுவற்றை இடித்து, அதில் இருந்த இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

    சுவற்றை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமடைந்த சுவற்றை பரமத்திவேலூர் அரிமா சங்க நிர்வாகிகள் கட்டித்தர முன் வரவேண்டும் என்றனர்.

    இது குறித்து வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில் சேதப்படுத்தப்பட்ட முக்கோண பூங்கா பற்றிய தகவல் கிடைத்தவுடன் பார்த்து வந்தோம். இரும்பு கம்பியை திருடிய மர்ம நபர்கள் மீது போலீசில் புகார் செய்யப்படும் என்றனர்.

    • தென்பெண்ணை ஆற்றில் மீனவர்கள் படகு மூலமாக மீன் பிடித்து வருகின்றனர். தங்கள் .3 படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு வழக்கம்போல் வீட்டிற்கு சென்றனர்.
    • காலை ஆற்றில் ஒரு சில மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, படகுகள் மற்றும் வலைகள் எரிந்த நிலையில் இருந்தது‌.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணை ஆறு உள்ளது . தென்பெண்ணை ஆற்றில் மீனவர்கள் படகு மூலமாக மீன் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் தாழங்குடா பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி, ராஜவேல், விஜயகுமார் ஆகிய 3 மீனவர்கள் தினந்தோறும் தென்பெண்ணையாற்றில் வலைகள் மூலம் மீன்பிடித்து செல்வது வழக்கம்.நேற்று வழக்கம் போல் தென்பெண்ணை ஆறு கரையோரம் தங்கள் 3 படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு வழக்கம்போல் வீட்டிற்கு சென்றனர்.இன்று காலை ஆற்றில் ஒரு சில மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, படகுகள் மற்றும் வலைகள் எரிந்த நிலையில் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் சம்பந்தப்பட்ட தாழங்குடா மீனவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் தாழங்குடா மீனவர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து பார்வையிட்டனர்.அப்போது படகு மற்றும் வலைகளுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதால் படகுகள் மற்றும் வலைகள் முழுவதும் எரிந்து சேதமாகி இருந்தது. தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த தீ விபத்தில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான படகுகள் மற்றும் வலைகள் எரிந்து நாசமானது தெரிய வந்தது  இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து படகுகள் மற்றும் வலைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தென்பெண்ணை ஆறு கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • இந்த காட்சி கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.
    • போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வினோத்.

    இவர் தனது வீட்டில் நடைபெற உள்ள சுப நிகழ்வு ஒன்றிற்காக புது துணிகள் எடுக்க நாகையிலுள்ள பிரபல துணிக்கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    கடையின் முகப்பு பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.

    அதனை மர்ம நபர்கள் 3 பேர் நோட்டமிட்டு மறைத்து வைத்திருந்த கள்ள சாவியை ஒருவர் எடுத்துக் கொடுக்க அதனை கொண்டு லாவகமாக சைடு லாக் திறந்து நைசாக மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர்.

    இந்த காட்சி கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.

    இது குறித்து வினோத் நாகை நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பட்ட பகலில், ஆட்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் நடந்த இந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டுக்கு பொருட்கள் வாங்க தனது மகளுடன் மொபட்டில் சேரமங்கலம் சென்றார்.
    • ஜெனிதா தாலி செயினை இறுக்கப்பிடித்து கொண்டு சப்தமிட்டார்.

    கன்னியாகுமரி :

    மண்டைக்காடு அருகே சேரமங்கலம் கண்ணிவிளையை சேர்ந்த வர் ஜெயசிங் (வயது50). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெனிதா (45). நேற்று மதியம் இவர் வீட்டுக்கு பொருட்கள் வாங்க தனது மகளுடன் மொபட்டில் சேரமங்கலம் சென்றார். பின்னால் மகள் அமர்ந்திருந்தாள். பொருட்கள் வாங்கி விட்டு வீட்டருகே செல்லும்போது பிள்ளையார்கோயில் - திங்கள்நகர் சாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற 2 மர்ம நபர்கள் திடீரென ஜெனிதாவின் கழுத்தில் கிடந்த 13 பவுன் தங்க தாலியை பறித்தனர். உடனே சுதாரித்து க்கொண்ட ஜெனிதா தாலி செயினை இறுக்கப்பிடித்து கொண்டு சப்தமிட்டார். மர்ம நபர்களின் கையில் செயின் சிக்காததால் அவர்கள் தப்பி சென்று விட்டனர். இதில் ஜெனிதா, மகள் இருவரும் கீழே விழுந்தனர். கீழே விழுந்ததில் அதிர்ஷ்ட வசமாக இருவருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இது குறித்து ஜெனிதா மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். சப் - இன்ஸ்பெக்டர் வில்சன் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சித்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பெரும்பாளி, ஆறாகுளம் பிரிவு, உள்ளிட்ட பகுதிகளில்,இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்தப்பகுதியில் புதிய ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது.

    இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி போலீசார் சமாதானம் செய்தனர்.

    • நேற்று வேலைக்கு சென்று விட்டு தனது ஸ்கூட்டரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார்.
    • வீட்டின் வெளியே சென்று பார்த்தபோது இவரது ஸ்கூட்டர் தீப்பிடித்து தெரிந்து கொண்டிருந்தது.

    விழுப்புரம்::

    விழுப்புரம் மாவட்டம் சின்ன கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (வயது 50) கூலித்தொழிலாளி. இவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு தனது ஸ்கூட்டரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்கச்செனறார்   நள்ளிரவு சமயத்தில் வீட்டின் முன்னால் இருந்து புகை மண்டலமாக வந்தது. திடுக்கிட்டு எழுந்த வேலு வீட்டின் வெளியே சென்று பார்த்தபோது இவரது ஸ்கூட்டர் தீப்பிடித்து தெரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வேலு தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். மேலும் இது குறித்து வேலு கோட்டகுப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் சம்பவ இடத்திற்கு சென்றுஸ்கூட்டர் எப்படி எரிந்தது யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே கோவிலில் நகை-பணம் திருடு போனது.
    • இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டியில் பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலை பூசாரி வழக்கம்போல் நேற்று இரவு பூஜை முடிந்ததும் பூட்டிவிட்டு சென்றார்.

    இன்று காலை மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தார். அப்போது கோவில் அலுவலக அறையும் திறந்து கிடந்தது.

    அங்கிருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த அம்ம னுக்கு அணிவிக்கப்படும் 6கிராம் தங்கத்தாலி, 10 கிராம் வெள்ளி கண்மலர் ஆகியவை திருட்டு போயி ருந்தது. மேலும் கோவிலில் இருந்த சிறிய உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணமும் திருடப்பட்டிருந்தது.

    யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்து நகைகள் மற்றும் உண்டியல் பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • பித்தளைக்கு பாலிஷ் போடுவதாக கூறி விளக்கை கொண்டு வந்து கொடுத்து பாலிஷ் போட்டுள்ளார்.
    • மர்மநபர்கள் அவர்கள் நகையுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ள னர்

    கடலூர்:

     திட்டக்குடி அருகே வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அமுதமொழி (29) தற்பொழுது தனது தாய் வீடான டி.ஏந்தல் வீட்டில் உள்ளார். நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பித்தளைக்கு பாலிஷ் போடுவதாக கூறியதன் பேரில், அமுதமொழி வீட்டில் இருந்த விளக்கை கொண்டு வந்து கொடுத்து பாலிஷ் போட்டுள்ளார். அப்போது மர்ம நபர்கள் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி பாலிஷ் போடும்போது, பளிச்சென்று தெரியவே, அமுதமொழி தன்னுடைய கழுத்தில் இருந்த தாலி செயின் மற்றும் ஒரு கிராம் மோதிரம் மொத்தம் 8 பவுன் நகையை கழற்றி பாலிஷ் போட்டு தரும்படி கொடுத்தார்.

    அப்போது மர்ம நபர்கள் அதிக நகை இருப்பதால் வெந்நீர் இருந்தால் தான் பாலிஷ் போட முடியும் என தெரிவித்தவுடன் அமுதமொழி வெண்ணீர் எடுப்பதற்காக வீட்டின் உள்ளே சென்றுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திய மர்மநபர்கள் அவர்கள் நகையுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ள னர் வெளியே வந்து பார்த்த அமுதமொழி மர்ம நபர்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு உள்ளார். அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த பொழுது நடந்தவற்றை அமுதமொழி கூறி அழுதுள்ளார். உடனடியாக ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமுதமொழி வீட்டிற்கு வருவதற்கு முன் அந்தப் பகுதியல் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று டிப்டாப் ஆசாமிகள் 2 பேர் வீட்டில் இருந்த பெண்ணிடம் பாலிஷ் போடலாமா என கேட்கும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்ததால் அந்த காட்சிகளை கொண்டு ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட காவல்துறை தனிப்படை அமைத்து இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் டிப்டாப் ஆசாமிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அவ்வழியாக சென்றவர்கள் அட்டை பெட்டிகள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
    • சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளை.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை ேபானது.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழப்பலம் அருகே அரசுக்கு சொந்த மான டாஸ்மாக் கடை உள்ளது.

    இந்த கடையில் பணி புரியும் ஊழியர்கள் நேற்று இரவு விற்பனை நேரம் முடிந்த பின்னர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர்.

    இந்நிலையில் இன்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடைப்பதையும், அதன் அருகே அட்டை பெட்டிகள் சிதறி கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இது குறித்து மன்னார்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர்.

    முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • பிரசன்னா சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் ஆம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
    • 4 கிராம் தங்க காசு ரூ.7000 பணம் 1 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு ேபானது.

    கடலூர்:

    சிதம்பரம் வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 42) இவர் புவனகிரியில் கடை வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் ஆம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து 29-ந் தேதி மாமியார் வீட்டிலிருந்து சிதம்பரத்திலுள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 4 கிராம் தங்க காசு ரூ.7000 பணம் 1 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு ேபானது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரசன்னா சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டவர் தற்போதுதான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
    • தினேசை அரிவாளால் வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தை சேர்ந்தவர் ரெட் தினேஷ்.ரவுடியான இவர் மீது சீர்காழி, புதுப்பட்டினம், செம்பனார்கோவில் காவல் நிலையங்களிவ் பல்வேறு குற்ற வழக்குககள் நிலுவையில் உள்ளது.

    ரவுடியான ரெட் தினேஷ் சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்ட இவர் தற்போதுதான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு ரெட் தினேஷ் கோவில்பத்து பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து தினேசை அரிவாளால் வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கொலையாளிகளை விரைந்து கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரர் நிஷா உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் அவர் எதற்காக வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×